இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்

by Lifestyle Editor

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இலங்கை அணியின் தொடர் தோல்வியால் சர்ச்சையை சந்தித்துள்ள நிலையில், தற்போதைய கிரிக்கெட் குழுவை கலைத்துவிட்டு, ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க ஏற்பாடு செய்தார்.

அதன்பின்னர், உலகக் கோப்பையில் மோசமான செயல்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து, முன்னாள் வீரர் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் அமைக்கப்பட்ட புதிய இடைக்கால குழு செயல்பட நீதிமன்றம் தடைவிதித்தது.

தலைவராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் தடை விழுந்ததால் அவர் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.

அதில், ”இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு உறுதிப்படுத்த வேண்டும்” என ஐசிசி அறிவித்துள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment