டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை ,..

by Lifestyle Editor

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டி வருகிறது. காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமான புள்ளிகளை எட்டியுள்ளது.

டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 9 முதம் 18 ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடும் காற்று மாசு காரணமாக நவம்பர் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குளிர்கால விடுமுறை அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Posts

Leave a Comment