சளி, இருமல், தொண்டை வலிக்கு நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்

by Lifestyle Editor

தேன்:

இருமல் மற்றும் சளித்தொல்லைக்குத் தீர்வு காணும் சிறந்த இயற்கை மூலிகைகளில் ஒன்று தான் தேன். குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை அதிகளவில் இருக்கும். இந்த வேளையில் நீங்கள் சிறிதளவு மிளகுப் பொடியுடன் தேனைக் கலந்து கொடுக்கும் போது இருமல் வர வாய்ப்பில்லை.

இலவங்கப்பட்டை பொடி :

தினமும் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னதாக அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை ஒரு தேக்கடிரண்டியில் தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இது உங்களது சுவாசக்குழாயை சுத்தம் செய்ய உதவியாக உள்ளது. மேலும் தொண்டைப்புண்ணை சரி செய்து இருமலைத் தணிக்கும் பண்புகள் இதில் உள்ளது. இந்த தேனுடன் நீங்கள் இஞ்சி விழுதையும் கரைத்து சாப்பிடலாம்.

பூண்டு:

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் சட்டென்று வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு ஆளாக நேரிகிறது. அதிலும் பருவ கால பாக்டீரியாக்களால் ஏற்படும் சளி, இருமல் , தொண்டை வலி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், பூண்டு பேருதவியாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி தொற்று பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. எனவே முடிந்தவரை உங்களுடைய சமையில் அதிகளவு பூண்டு உபயோகிக்கவும்.

ஓமம்:

சளி மற்றும் இருமல் தொல்லைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது ஓமம். எனவே நீங்கள் துளசி மற்றும் ஓமத்தைக் கொதிக்க வைத்து குடிக்கும் போது மார்பு சளி உங்களுக்கு நீங்கும்.

வைட்டமின் சி:

வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கு சளியை எதிர்த்துப்போராடும் குணம் அதிகளவில் உள்ளது. எனவே நீங்கள் இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் குடிக்கும் போது வறட்டு இருமல் குணமாகும். இதோடு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகளவில் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளவும்.

Related Posts

Leave a Comment