பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜை

by Lifestyle Editor

முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்த நினைவிடம் வருகின்றனர். இன்று காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவர் சிலை அமைந்துள்ள கோரிப்பாளையம் பகுதியில் விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் செல்லக்கூடிய பிற மாவட்ட வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும் என மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் ட்ரோன் கேமரா இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் மூர்த்தி, தங்கம் தென்னரசு , கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் ..

Related Posts

Leave a Comment