ஏழு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா இல்லாத நுழைவு – அரசாங்கம் தீர்மானம்

by Lankan Editor

ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இன்றி பிரவேசிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாத அணுகலை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டம் உடன் அமுலுக்கு வருவதாகவும் 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை தொடரும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment