கற்பூரவள்ளி இலையின் நன்மைகள்

by Lankan Editor

மருத்துவ குணம்கள் கொண்ட பலவகையான செடிகள் உள்ளன. அவற்றில் ஒன்று அஜ்வைன் இலை. இது கற்பூரவல்லி, ஓமவல்லி என்றும் அழைக்கப்படும் அற்புதமான மருத்துவ பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மிக முக்கியமான மூலிகையாகும். கற்பூரவல்லி பாரம்பரியமாக குழந்தைகள்  மற்றும் பெரியவர்களுக்கு சளி மற்றும் இருமல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது நரை முடி மற்றும் பொடுகு போன்ற முடி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், எடை இழப்புக்கு உதவுவதற்கும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஆஸ்துமா மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுகிறது.

கற்பூரவள்ளி இலையின் நன்மைகள்:

  • இந்த இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நெற்றியில் பற்றுப்போட்ட்டால் ஜலதோஷம், தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.
  • அதுபோல் நீங்கள் அதிகப்படியான கபம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த இலையை அரைத்து தண்ணீரில்  கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவற்றுடன், ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள். அதுமட்டுமின்றி, இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும் தெரியுமா.

கற்பூரவள்ளி மருந்து குழம்பு: 
இந்த குழம்பு தயாரிக்க இந்த இலையை முதலில் நன்கு அலசி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில்,  மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா என அனைத்தையும் தனித்தனியாக வறுத்து, மிக்சியில் போட்டு பவுடராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே பாத்திரத்தில், சிறிதளவு எண்ணெய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி, ஆறிய பின் தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment