நெஞ்செலும்பு சூப்

by Lifestyle Editor

காலநிலை மாற்றத்தால் அடிக்கடி சிலருக்கு சளி, இருமல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே போகும்.

இதனால் நிம்மதியாக சாப்பிடமுடியாது, வேலைப்பார்க்க முடியாது, மூச்சுக் கூட விடமுடியாது, மூக்கை அடைத்துக் கொண்டு பேசக் கூடமுடியாமல் போகும். இந்த சளிப்பிரச்சினையை திரும்ப வரவிடாமல் தடுக்கலாம் காரசாரமாக நெஞ்செலும்பு சூப்.

தேவையான பொருட்கள்

நெஞ்செலும்பு – 1/2 கிலோ
மஞ்சள்
சீரகம்
மிளகு
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
சின்ன வெங்காயம்
தக்காளி
உப்பு

செய்முறை

முதலில் மஞ்சள், சீரகம், பூண்டு, இஞ்சி என்பவற்றைச் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயத்தை இரண்டாக தட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்துக்கொண்டுள்ள நெஞ்செலும்பை நன்றாக கழுவி குக்கரில் வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பழுத்த பெரிய தக்காளியை பிசைந்து விட வேண்டும். அதன்பின் அரைத்து எடுத்துக் கொண்ட மசாலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவை ஏற்படின் கிராம்பு, இலவங்கம், பிரியாணி இலை சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இப்போது குக்கரை மூடி அடுப்பை குறைவான அளவில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

அடுப்பை அணைத்து விட்டு 20 நிமிடம் வரை விட வேண்டும். இதையடுத்து குக்கரை திறந்து தேவையான அளவு மல்லித்தழையை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் மேலும் கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து சூப்பை தனியாக வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறி சுவைத்தால் ஜலதோசப் பிரச்சினைகள் இல்லாமல் போகும்.

Related Posts

Leave a Comment