கத்தரிக்காய் சட்னி..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் – 250 கிராம்

வெங்காயம் – 1

தக்காளி – 2

பூண்டு – 2 பல்

புளி – நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

பெருங்காய போடி – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – தேவைக்கேற்ப

காய்ந்த மிளகாய் – 2

கருவேப்பிலை – தேவைக்கேற்ப

சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய போடி சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

கத்தரிக்காய் மென்மையாக வேகும் வரை மூடிபோட்டு வேகவிடவும்.

கத்தரிக்காய் வெந்தவுடன் அனைத்தையும் நன்றாக மசித்து கொள்ளவும்.

கத்தரிக்காய் நன்கு மசிந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கிளறி விடவும்.

இவை அனைத்தையும் ஒரு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் சேர்க்கவும்.

வெந்தயம் பொரிந்ததும் சீரகம், நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் சாம்பார் பொடி சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கி விடவும்.

இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் கத்தரிக்காயில் சேர்த்து கிளறி விடவும்.

கத்தரிக்காயை இறக்கி வைப்பதற்கு முன் கொத்தமல்லி இலையை நறுக்கி கத்தரிக்காய் சட்னியில் சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

அவ்வளவுதான் சுவையான ‘கத்தரிக்காய் சட்னி’ தயார்.

Related Posts

Leave a Comment