குக் வித் கோமாளி 4ல் IPL கிரிக்கெட் வீரர்கள்.. யார் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் தெரியுமா

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இம்யூனிட்டி சுற்றை வென்று டாப் 5ல் சென்றுவிட்டார் சிவாங்கி. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருகை தந்திருந்தார்.

அதே போல் சிவகார்த்திகேயன், சிம்பு, ஆர்யா, ஆர். ஜே. பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

குக் வித் கோமாளியில் IPL கிரிக்கெட் வீரர்கள்

இந்நிலையில், IPL கிரிக்கெட் வீரர்கள் இருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் குக் வித் கோமாளியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள போவதாக தெரிவிக்கின்றனர். இந்த எபிசோடு அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment