நெல்லிக்காய் ஹேர் பேக்

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி – தலா 1 டேபிள்ஸ்பூன்,
தயிர் – 1/2 கப்.

செய்முறை:

நெல்லிக்காய் பவுடருடன், வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி மற்றும் தயிர் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். அரை மணி நேரத்துக்கு மேல் ஊறவைக்கக் கூடாது.

பலன்கள்:

* உடலில் பித்தம் அதிகமானால், இளநரை ஏற்படும். நெல்லிக்காயில் உள்ள குளிர்ச்சித்தன்மை, சிறுவயதில் ஏற்படும் நரைப் பிரச்னையைப் போக்கும். நெல்லிக் காய் முடியின் கருமை தன்மையைத் தக்கவைப்பதோடு, அடர்த்தியையும் அதிகரிக்கும்.

* நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், செல்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து, முடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். அது மட்டுமின்றி இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கனிமச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள், முடியின் வேர்ப்பகுதியை வலிமைப்படுத்தி, தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

* நெல்லிக்காய் தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். தலைமுடிப்பரப்பில் உள்ள பாக்டீரியாவை அழிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால், பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்றவை தடுக்கப்படும்.

Related Posts

Leave a Comment