அதிர்ச்சியளிக்கும் வகையில் குக் வித் கோமாளியின் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. கண்கலங்கிய ஸ்ருஷ்டி, மோனிஷா

by Lifestyle Editor

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே காளையன், கிஷோர் ராஜ்குமார் மற்றும் ராஜ் அய்யப்பா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் யார் அந்த வரிசையில் இணைய போகிறார்கள் என தெரியாமல் இருந்தது.

ஷாக்கிங் எலிமினேஷன்

இந்நிலையில், அந்த வரிசையில் குக் வித் சோமாளியில் இருந்து 4வது எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார் போட்டியாளர் விஜே விஷால்.

இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். குக் வித் கோமாளியில் போட்டியாளராக களமிறங்கிய இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

ஆனால், இந்த வாரம் நடுவர்களிடம் இருந்து குறைந்த மதிப்பெண்களை பெற்ற விஜே விஷால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

விஜே விஷால் வெளியேறும் பொழுது அனைவரும் வருத்தத்துடன் இருந்த நிலையில், அவருடன் கோமாளியாக இருந்த மோனிஷா மற்றும் போட்டியாளர் நடிகை ஸ்ருஷ்டி இருவரும் கண்கலங்கினார்கள்.

இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடந்தது என்னவென்றால், தொடர்ந்து நான்கு ஆண் போட்டியாளர்கள் மட்டுமே தான் இதுவரை குக் வித் கோமாளி 4ல் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தான்.

விரைவில் அவர் வைல்ட் கார்ட் சுற்றில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment