குக் வித் கோமாளியில் இந்த வாரம் இப்படியொரு ட்விஸ்ட்-ஆ.. எதிர்பார்க்கவே இல்லையே

by Lifestyle Editor

CWC 4

குக் வித் கோமாளி சீசன் 4ல் இந்த வாரம் புதிதாக இரண்டு போட்டியாளர்கள் களமிறங்கினர்கள். நாகேஷ் அவர்களின் பேரன் கஜேஷ் மற்றும் கலை இயக்குனர் கிரண் ஆகிய இருவர் தான் புதிய போட்டியாளர்கள்.

புதிதாக இரு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளதால், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்துவிட்டனர். ஆம், இந்த வாரம் இம்யூனிட்டி என கூறப்பட்ட நிலையில், புதிய போட்டியாளர்களின் என்ட்ரி காரணமாக இந்த வாரம் கொண்டாட்டம் வாரம் மாற்றவிட்டனர்.

இப்படியொரு ட்விஸ்ட்-ஆ

இதனால் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இந்த வாரம் நன்றாக சமைத்து நடுவர்களிடம் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் போட்டியாளருக்கும், கோமாளிக்கும் இரு ஸ்மார்ட் டிவி பரிசாக கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, நடைபெற்ற இந்த கொண்டாட்டம் சுற்றில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் இருந்து அதிக மதிப்பெண்களை பெற்று இரு ஸ்மார்ட் டிவியையும் விசித்திரா மற்றும் சுனிதா தட்டி சென்றுவிட்டனர்.

Related Posts

Leave a Comment