சன்டேன் பிரச்சனை ஐ நீக்கி சருமத்தை பளப்பளப்பாக்க ..

by Lifestyle Editor

சாஃப்டான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால் வேலை நிமித்தமாக அடிக்கடி வெயிலில் அலைவது உள்ளிட்ட சில நம் வெளிப்புற வாழ்க்கை முறையால் பிக்மென்டட் சருமத்தை பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அதிக நேரம் வெயிலில் இருப்பதால் சிலருக்கு சருமம் அதன் இயல்பான கலரில் இருந்து கருமையாகி விடும். இது சன்டேன் (Sun Tan) என குறிப்பிடப்படுகிறது. மிகவும் சென்சிடிவ்வான ஸ்கின் கொண்டவர்கள் வெயிலில் சில நிமிடங்கள் சென்றாலே சருமம் கருத்து விடும். உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். Sun Tan-ஐ நீக்கி மிருதுவான, பிரகாசமான சருமத்தை பெறுவதற்கான சில எளிய டிப்ஸ்கள் கீழே.

லெமன் ஜூஸ் மற்றும் தேன் : எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும், இது Sun Tan-ஐ அகற்ற உதவுகிறது. நீங்கள் ஃப்ரெஷ் லெமன் ஜூஸை எடுத்து கொண்டு அதில் 1 டேபிள்ஸ்பூன் தேனை சேர்க்கவும். இந்த கலவையோடு நீங்கள் சிறிதளவு சர்க்கரை சேர்த்து உங்கள் சருமத்தில் மெதுவாக தேய்க்கலாம், இதனால் இறந்த செல்கள் சருமத்திலிருந்து வெளியேறும். சுமார் 25 நிமிடங்கள் கழித்து இந்த பேக்கை கழுவி விடலாம்.

கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர்: சருமத்தின் நிறத்தை ஒளிர செய்வதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் சருமத்தை பிரகாசமாக்கும் ஸ்கின்-பிரைட்னிங் ஏஜென்ட்டாக செய்லபடுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தை மிருதுவாக்கும். எனவே இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து மிக்ஸ் செய்து பேஸ்ட்டாக்கி சருமத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யவும். சுமார் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் மெதுவாக தேய்த்து வாஷ் செய்து விடுங்கள்.

பப்பாளி, தக்காளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரி: பப்பாளியானது எக்ஸ்ஃபோலியேட் பண்புகள் நிறைந்தது மற்றும் நேச்சுரல் என்சைம்களை கொண்டுள்ளது. தவிர சிறந்த நேச்சுரல் ப்ளீச்சிங் ஏஜன்ட்டாகவும் செயல்படுகிறது. உருளைக்கிழங்கு சாறு நல்ல ப்ளீச்சிங் ஏஜன்ட் மட்டுமல்ல, கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நீக்குகிறது. தக்காளி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. வெள்ளரி ஒரு சென்சேஷ்னல் கூலிங் ஏஜென்ட் மற்றும் வெயிலில் சருமத்தில் ஏற்பட்ட நிறமாற்றத்தை அகற்ற உதவுகிறது. பழுத்த பப்பாளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் வெள்ளரி ஆகியவற்றை 4-5 க்யூப்ஸ் எடுத்து, ஜெல்லி போல பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை ஃப்ரிட்ஜில் சுமார் 15 நிமிடங்கள் வைத்து கூலிங்கானவுடன் எடுத்து அந்த பேஸ்ட் சருமத்தில் உறிஞ்சப்படும் வரை தேய்க்கவும்.

பருப்பு, மஞ்சள் மற்றும் பால்: இரவில் மசூர் பருப்பை காய்ச்சாத பச்சை பாலில் ஊற வைக்கவும். ஊறவைத்த பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து,சருமத்தில் தடவி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் நன்கு காயும் வரை காத்திருந்து பின் அதை வாஷ் செய்துவிடுங்கள்.

காபி, தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை: காஃபின் நன்மைகளுடன் காஃபி சருமத்திற்கு பல நன்மைகளை கொண்டுள்ளது. டி-டேனிங் பண்புகளை தவிர காபி முகப்பருக்களை அகற்ற உதவுகிறது. மறுபுறம் தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. காபி பவுடர், தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்டவற்றை சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனை சருமத்தில் அப்ளை செய்து சுமார் 10 நிமிடம் ஸ்கரப் செய்யவும். பின் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் வாஷ் செய்துவிடுங்கள்.

Related Posts

Leave a Comment