இன்றைய போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல் ..

by Lifestyle Editor

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணியை பொறுத்தவரையில், இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இதேபோல் பெங்களூரு அணியும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அதில் 5 வெற்றியும், 5 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால் எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். ஆகையால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment