தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு..

by Lifestyle Editor

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,920க்கு விற்பனையாகிறது.

தங்கம் என்பது எப்போதுமே பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றுதான், என்றாலும் தங்கம் விலை தலை சுற்ற வைப்பதாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருப்பது போன்று கனிசமாக விலை அதிகரித்தே வருகிறது. அதாவது கடந்த ஜனவரி மாதம் ரூ. 42 ஆயிரத்திற்கு விற்பனையான தங்கம் விலை தற்போது ரூ. 45 ஆயிரத்தை தொட்டுவிட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5.615க்கும், ஒரு சவரன் ரூ.45,040க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ஒரு சவரன் ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,500-க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment