உங்கள் செக்ஸ் வாழ்க்கை மேம்பட இந்த பழக்கத்தை கைவிடுங்கள் …

by Lifestyle Editor

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதால் பாலியல் தூண்டுதல் அதிகரிக்கும் மற்றும் செக்ஸ் வாழ்வில் அதிக திருப்தியாக இருக்க வழிவகுக்கிறது. புகைபிடிக்கும் நபர்களுடன் ஒப்பிடுகையில் புகைபிடிக்காத ஆண்கள் இருமடங்கு அளவு உடலுறவு கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைப்பழக்கத்தை கைவிட்ட ஆண்கள் வேகமான அதே சமயம் உறுதியான விறைப்புத்தன்மையை பெற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்த நாளங்களின் சுருக்கத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் விறைப்புத்தன்மையை பராமரிக்க தேவையான ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுகிறது.
புகைப்பழக்கம் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் உடலின் திறனை பாதிக்கிறது, இது நமது ஆற்றலில் 90% உற்பத்திக்கு காரணமாகும். தொடர்ந்து புகைபிடிப்பதால் ஸ்டாமினா லாஸ் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படலாம் தவிர உங்கள் பாலியல் வாழ்க்கையின் செயல்திறனை பாதிக்கலாம்.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் லிபிடோ லெவல் குறைவு காரணமாக பாலுறவு செயல்திறனில் ஏற்படும் குறைவால் படுக்கையில் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் திருப்தி ஏற்படாமல் போகலாம். புகைப்பழக்கத்தை கைவிட்டால் இன்பமான செக்ஸ் வாழ்க்கைக்கு அது உறுதுணையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment