செக்ஸில் உங்களை மூடேற்றி, சூடேற்றும் 3 சூப்பர் பானங்கள்…

by Lifestyle Editor

பாலியல் உறவு என்பது சில சமயங்களில் மென்மையானது, சில சமயங்களில் வன்மையானது. அப்படியான, பாலியல் உறவின் ஈடுபாட்டை தூண்டுவதற்கு, தேவையான மூன்று சிறப்பு பானங்கள் இருக்கிறது.

செக்ஸ் உறவு என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். அப்படியான, பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது.

கரோனா காலகட்டத்தில் காலை நேரத்தில் உடலுறவு கொள்வது, உடலை புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும். மேலும், ஆரோக்கியமான உடற்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை செக்ஸில் ஈடுபாட்டை அதிகரிக்கும். இவற்றை தவிர்த்து, நீங்கள் பாலியல் உறவில் ஈடுபாட்டை அதிகரிக்க, தேவையான மூன்று பானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கற்றாழை ஜூஸ்:

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை ஜூஸ், உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலை கற்றாழை சாறு வழங்குகிறது. இதன் மூலம் பாலியல் உணர்வு தூண்டப்பட்டு முழு ஈடுபாட்டுடன் செயல்பட வைக்கிறது.

பால்:

பால் (Milk) குடிக்க சரியான நேரம் உள்ளது. சரியான நேரத்தில் அதை உட்கொண்டால், அதன் பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். பால் பல்வேறு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, பாலியல் ஆரோக்கியத்துக்கும் சக்தி வாய்ந்த பண்புகளை கொண்டுள்ளது. அதனால் தான் திருமணம் நாள் அன்று இரவில் பால் முக்கிய பானமாக உள்ளது. எனவே, இன்றிலிருந்து தினமும் படுக்கைக்கு முன் ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு பாலியல் செயப்பாட்டை துவங்குங்கள்.

தர்பூசணி:

தர்பூசணியில் உள்ள மூலப்பொருள்கள் வயாக்ரா உடலில் செயல்படுவதை போலவே வேலை செய்யுமாம். தர்பூசணி பழங்களை பொடியாக நறுக்கி, இதனுடன் ஒரு பத்து இதழ் புதினா தழைகளை சேர்த்து மிக்சியில் அடித்துக்கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், இதனுடன் ஐஸ்க்யூப்ஸ் சேர்த்து குடிக்க வேண்டும்.

இது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை தூண்டுகிறது. இதனால், ஆண் குறிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அமினோ அமிலம் நிறைந்த தர்பூசணிகள் உங்கள் விறைப்புத்தன்மையை வலுப்படுத்தும் ஆற்றலை கொடுக்கிறது. இது தவிர வாழைப்பழம், அவகேடோ போன்ற பழங்களின் பானங்களும் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறது.

Related Posts

Leave a Comment