பிரசவத்திற்கு பின் தொப்பையை குறைக்க பெல்ட் அணியலாமா …

by Lifestyle Editor

மகேப்பேறு என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பிரசவத்திற்குப் பின் பெண்கள் தங்கள் தொப்பையைக் குறைக்க வொர்க்அவுட் செய்ய திட்டமிடுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.பிரசவத்திற்குப் பின் தோன்றக்கூடிய தொப்பையைக் குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் ஒன்றும் இல்லை. பொதுவாக பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் உடல் சோர்வு, உடல் வலி, மனநிலை மாற்றங்கள் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு போன்ற பின்விளைவுகளை எதிர் கொண்டு ரோலர் கோஸ்டாரில் சவாரி செய்வது போன்ற அனுபத்தை தினம் தினம் அனுபவிப்பார்கள்.

ஜெர்மனியைச் சேர்ந்த OBGYN டாக்டர். அமினா காலிட், பிரசவத்திற்குப் பின் பெல்ட்டைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால், இதன் பயன்பாடு தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் என்பதற்கு எந்த அறிவியல் ரீதியிலான ஆதாரமும் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். “தொப்பை கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான உணவு மற்றும் அல்லது தசைகளை வலுப்படுத்தும் வகையிலான உடற்பயிற்சி தான் மிக மிக அவசியம்.” என்று அவர் கூறினார். அப்படி இருக்க, பெண்கள் பிரசவத்திற்குப் பின் பெல்ட்டைப் பயன்படுத்துவது ஏன்? வாருங்கள், இது குறித்து நிபுணர்கள் கருத்துக்கள் என்ன என்று பார்ப்போம்.

போஸ்சரை வலுப்படுத்துகிறது : பெல்ட்கள் வயிற்றுப் பகுதியை இழுத்துப் பிடித்து தேவையான ஆதரவை வழங்குகின்றன. இதனால் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்கள் லேசாக உணர்வார்கள். இதனால் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு நகர்வது சற்று எளிதாகிவிடும்.

முதுகு வலியைக் குறைக்கும் : பிரசவத்திற்குன் உடல் சோர்வு மற்றும் வலி இருப்பது இயல்பான ஒன்று தான். ஆனால், பெல்ட்டின் பயன்பாடு முதுகு வலியைத் தடுக்க உதவுகிறது.

சிசேரியன் டெலிவரிக்கு உட்பட்ட பெண்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் : சிசேரியன் டெலிவரிக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு பெல்ட் இரண்டு விதங்களில் உதவியாக இருக்கும். முதலாவது இயக்கங்களின் கட்டுப்பாடு. ஆம், இது தளர்வான வயிற்று தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் அசைவு கொடுக்கும் போது குறைந்த வலி தான் இருக்கும். மற்றொரு நன்மை என்னவென்றால், அது தையல்கள் பிரியாமல் பாதுகாக்கும்.

Related Posts

Leave a Comment