பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன …

by Lifestyle Editor

இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற பஞ்சாப் அணி அவற்றில் கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வியும் பெற்று 6 புள்ளிகளுடன் 5 வது இடத்தை பிடித்துள்ளது. தோள்பட்டை காயத்தால் கடைசி போட்டியில் விலகிய கேப்டன் ஷிகர் தவான் இந்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற பெங்களூரு அணி, மும்பை, டெல்லி அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், கொல்கத்தா, லக்னோ, சென்னை அணிகளுக்கு எதிராக தோல்வியும் பெற்று 4 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 227 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உள்ளூரில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்தும், புள்ளி பட்டியலில் முன்னேற வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி மல்லுக்கட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இராது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ளன அவற்றில் பஞ்சாப் 17, பெங்களூரு 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதிய கடைசி 6 போட்டிகளிலும் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment