புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் 600 பவுண்டரி ..

by Lifestyle Editor

ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகளை அடித்தவர்கள் வரிசையில் விராட் கோலி 3 ஆவது இடத்தில் உள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக 591 பவுண்டாகளை விளாசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (528), சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா (506) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை டெல்லி அணி பிடித்திருக்கிறது. தொடர் தோல்விகள் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் அவரது ஆமை வேக பேட்டிங், டெல்லி அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment