ஐபிஎல் தொடர்.. சிக்ஸர் அடிப்பதில் புதிய சாதனை படைத்த தோனி ..

by Lifestyle Editor

16 ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்துடன் மோதியது. இதில், மகேந்திர சிங் தோனி, 7 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள கிறிஸ் கெயில், பெங்களூரு அணிக்காக 239 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரை தொடர்ந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் பெங்களூரு அணிக்காக 238 சிக்ஸர்கள் அடித்து 2 ஆவது இடத்தில் உள்ளார். இப்பட்டியிலில் 3 ஆவது இடத்தில் உள்ள போலார்டு மும்பை அணிக்காக 223 சிக்ஸர்கள் அடித்துள்ளார். விராட் கோலி பெங்களூரு அணிக்காக 218 சிக்ஸர்கள் அடித்து, இப்பட்டியலில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Related Posts

Leave a Comment