பருக்கள் இல்லாத மென்மையான சருமத்தை பெற …

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

தேங்காப்பால் – 2 ஸ்பூன்.

தேன் – 2 ஸ்பூன்.

பாதாம் – அரை கப்.

பேஸ் பேக் செய்ய கோப்பை ஒன்று.

பேஸ் பேக் செய்முறை :

பேஸ் செய்ய எடுத்துக்கொண்ட பாதாமினை ஒரு கோப்பையில் தண்ணீருடன் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், ஊறவைத்த பாதாமினை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

கூழ்ம நிலைக்கு அரைத்த இந்த பாதாம் சேர்மத்துடன் தேன் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள, சரும பொலிவுக்கு உதவும் பேஸ் பேக் ரெடி.

முறையாக தயாரிக்கப்பட்ட இந்த பேஸ் பேக்கினை, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு உலர விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் 3 முறை இந்த பேக் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய்ப்பால் காப்பரின் சிறந்த மூலமாக உள்ளது. இந்த காப்பர் சரும சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் பளபளக்கும் சருமம் பெற உதவுகிறது.

பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேன், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்டது. மேலும், சருமத்தின் தளர்வுகளை கட்டுப்படுத்தி இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது.

பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் பாதாம், வைட்டமின் ஈ-ன் சிறந்த மூலமாக உள்ளது. இந்த வைட்டமின் சருமத்தின் இயற்கை பொலிவை மீட்டு தர உதவுகிறது. மற்றும் பதாமின் அழற்சி எதிர்ப்பு பண்பு, சரும தடிப்புகளை தடுக்கிறது.

ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் சருமத்திற்கு தேனை பயன்படுத்துகையில், சரும ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, குறிப்புகளை பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது.

Related Posts

Leave a Comment