முடி உதிர்வு..கட்டுப்படுத்துவதற்கு டிப்ஸ்..

by Lifestyle Editor

தண்ணீர்:

குளிர்காலத்தில் சுற்றி குளிர் இருப்பதால் நீர் அருந்துவதை பற்றி விடுகிறோம். அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்றும் சிலர் நீர் அளவை குறைக்கிறார்கள். இதுவும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, செல்கள் மற்றும் திசுக்களில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இயற்கை எப்போதுமே உயிர்களை காக்கும் தன்மையதாகத் தான் இருக்கும். ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் கோட்பாட்டின்படி குளிர்காலத்தில் தலையும் வளரும் பெரும்பாலான உணவு பொருட்கள் இந்த காலத்திற்கு ஏற்ற நோயெதிர்ப்பு சக்தியை நமக்குத் தருவதற்கானதாகவே இருக்கும். அதனால் பருவகால காய்கறிகள் மற்றும் பலன்களை உண்ணுங்கள்.

மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்:

நம்மில் பலர் குளிர்கால உணவில் மதுவை சேர்த்துக் கொள்கிறோம். இது உடலை வெப்பமாக வைத்துக்கொள்ளும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்கள் மது அருந்துதல் உடலில் திரவ இழப்பை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். இது நச்சுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது, மேலும் நமது முடி உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

வறுத்த உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும்:

ஆரோக்கியமான உணவுக்கு கூடுதலாக , வறுத்த மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துவது முக்கியமானது என்று கூறுகிறது. இது உடலில் செரிமானம் ஆக அதிக சக்தியை எடுத்துக்கொள்வதால் உடல் எளிதில் சோர்ந்துவிடும். இதுவும் முடி கொட்ட காரணமாகும்.

Related Posts

Leave a Comment