மீண்டும் பணிநீக்கம் செய்யும் அமேசான் ..

by Lifestyle Editor

அமேசான் நிறுவனம் மேலும் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் விளம்பரப்பிரிவு மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Related Posts

Leave a Comment