உச்சத்தை தொட்டது தங்கம் விலை ..

by Lifestyle Editor

ஒரு சவரன் தங்கம் கடந்த 1 மாத காலமாக இல்லாத அளவில் உச்சத்தை தொட்டு ரூ.44 ஆயிரத்தை எட்டவுள்ளது.

தங்கம் விலை கடந்த ஒரு வாரகாலமாக இறக்கம் கண்ட நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

நேற்று(15/03/2023) தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து இன்று 5,891 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 360 ரூபாய் வரை உயர்ந்து 47,128 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.45 உயர்ந்து 5,425 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.360 வரை உயர்ந்து 43,400 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 72.70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,700 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment