மணப்பெண் கோலத்தில் உலா வரும் பிக்பாஸ் ஜனனி:

by Lifestyle Editor

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜனனி மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவரந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் ஜனனி

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டதாகவும் மேலும், தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைரல் வீடியோ

இந்நிலையில் தற்போது வித விதமாக பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவிட்டு வருகிறார்.

இவரின் ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கும் போது இவர் வர வர லாஸ்லியாவிக்கு போட்டியாக மாறிவிட்டார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்பொழுது ஒரு ரீல்ஸ் வீடியோாவால் அனைவரையும் அழகால் கட்டிப்போட்டியிருக்கிறார். அந்த வீடியோவில் மணப்பெண் போல கோலத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment