சென்னையில் 2 நாட்களுக்கு பவர்கட்! எந்தெந்த ஏரியாவில் தெரியுமா …

by Lifestyle Editor

சென்னை மாநகரில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய அறிவிப்பின்படி இன்று (19.01.2023) எழும்பூர் பகுதியில் உள்ள கெங்கு ரெட்டி தெரு, பாந்தியன் ரோடு, மாண்டியத் சாலை, ஜகதம்மாள் கோவில் தெரி, நீதிபதிகள் குடியிருப்பு, எத்திராஜ் சாலை, மோதிலால் சந்து ஆகிய பகுதிகளிலும், அம்பத்தூரில் டி.ஐ சைக்கிள் சோழபுரம், அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், திருவெங்கட நகர், கே.கே ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், பெரம்பூரில் சிட்கோ, வில்லிவாக்கம் தெற்கு, ஜெகநாதன் நகர், நேரு நகர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, டீச்சர்ஸ் காலணி, சோலையம்மன் கோவில் குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை முதல் மதியம் 2.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அடையார், அம்பத்தூரில் உள்ள பல பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment