குதிகாலில் வெடிப்பா..? கவலையை விடுங்க.. இந்த வீட்டு வைத்திய முறைகளை செய்து பாருங்க..

by Lifestyle Editor

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு சில காரணங்களுக்கும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் பிளவுகள் இன்னும் ஆழமாக போகும் பட்சத்தில், அது வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

குளிர்காலத்தில் வரும் அழகு பிரச்சனைகள் உடல் ரீதியாக எந்த வலியையும் ஏற்படுத்தாது ஆனால் குதிகால் வெடிப்பு நிச்சயம் வலியை ஏற்படுத்தும்.. எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாகவும் இந்த பிரச்னை வரலாம். பெரும்பாலும் இந்த பிரச்னையை அதிகம் பெண்களே எதிர்கொள்கின்றனர். அது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. நமது உடல் அதிக அழுத்தம் கொடுத்து நடக்கும் போது, சருமம் தடித்து குதிகால் வெடிப்பை உண்டாக்குகிறது. குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு சில காரணங்களுக்கும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் பிளவுகள் இன்னும் ஆழமாக போகும் பட்சத்தில், அது வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

ஆனால் அழகு நிலையங்கள் முதல் மருத்துவமனை வரை குதிகால் வெடிப்பை குணமாக்குவதற்கு எண்ணற்ற சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், இது பலருக்கும் நிரந்தர தீர்வை வழங்குவது கிடையாது. மென்மையான மற்றும் சிறந்த குதிகால்களுக்கு நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. ஆம் நாம் அன்றாடம் பயன்படுத்த வீட்டில் வைத்துள்ள சில பொருட்களை வைத்து குதிகால் வெடிப்பு பிரச்னைக்கான தீர்வுகளை தற்போது பார்க்கலாம்.

நெய் :

நெய் உங்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டும் அல்லாமல் முழுமையாக தோலில் உள்ள செல்களுக்கு ஊட்டமளிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். இது உங்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம் ஆனால், நீங்கள் பயன்படுத்தும் மற்ற கிரீம்களைப் போலவே, வாரத்திற்கு இரண்டு முறை பாதங்களில் நெய் தடவி வருவதன் மூலம், குதிகால்கள் மென்மையானதாகவும் வெடிப்புகள் இன்றியும் நல்ல பலனை தரும்.

தேன் :

வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து பாதங்களை நனைப்பதன் மூலம் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கிறது. குறைந்தது தினமும் கால்களை நன்றாக சுத்தம் செய்து தேன் கலந்த தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்து வந்தால், பாதங்கள் மென்மையாக மாறிவிடும். தேனியில் நிறைய ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது அந்த பகுதியில் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், கிருமிகளை விரட்ட ஒரு எக்ஸ்ஃபோலியேட்டராகவும் பயன்படுத்தப்படுகிறது. குதிகால் வெடிப்பிலுள்ள காயத்தை சீக்கரமாக இது குணப்படுத்திவிடும். மேலும் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும்.

தேங்காய் எண்ணெய் :

பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளின் நன்மையால் நிரப்பப்பட்ட தேங்காய் எண்ணெய், உங்கள் வெடிப்புகள் நிறைந்த குதிகால்களை மேம்படுத்த ஒரு சிறந்த பொருளாக பயன்படும். தேங்காய் எண்ணெயில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்களும் மிளரல்களும் நுண்ணூட்டச்ச த்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கால்சியம், புரதச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, காம்ப்ளக்ஸ் சத்துகள், வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ‘பி’ நிறைந்துள்ளன.

காலுறைகள் :

காலுறைகள் உங்கள் கால்களை சூடாக வைத்திருக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதனால் குதிகால் பகுதி சூடாக இருந்தால் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே எப்போதும் சாக்ஸ் அணிந்துகொள்வது நல்லது.

Related Posts

Leave a Comment