இன்னைக்கு பீச் லீவு.. தூரத்துல இருந்துதான் பாக்கணும்! – சென்னை காவல்துறை வைத்த ட்விஸ்ட் …

by Lifestyle Editor

இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் பலரும் மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் கடலுக்கு செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பொங்கல், மாட்டு பொங்கலை தொடர்ந்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலில் உறவினர்களை சென்று சந்திப்பதும், வெளியூர்களுக்கு அல்லது சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதும் வழக்கம்.

சென்னையில் மக்கள் பலரும் காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் வழக்கத்தைவிட காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை அதிக கூட்டமாக காணப்படுகிறது. கடற்கரை வரும் பலரும் கடலில் அலைகளில் இறங்கி நடக்கவும், குளிக்கவும் விரும்புவர்.

இந்நிலையில் சென்னை காவல்துறையினர் கடற்கரையையொட்டி மக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இதனால் கடலை வேலிக்கு அப்பால் இருந்தே பார்க்க முடியுமே தவிர கடல் அலைகளில் கால்களை கூட நனைக்க முடியாது என்பதால் பலர் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment