குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

by Lifestyle Editor

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து உள்ளதால் மெயின் அருவி, பழைய அருவி ஆகிய குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மெயின் அருவியைத் தவிர ஐந்தறிவு, பழைய குற்றாலம் ,சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணி வரத்து கடந்த ஒன்னாம் தேதி அன்று சீரானது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னர் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரான தால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது .

இந்த நிலையில் நேற்று இரவில் தென்காசி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment