திடீரென்று பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

by Column Editor

அமுல் பால் நிறுவனம் தனது பாலின் விலையை உயர்த்தியுள்ளது. இன்று மார்ச் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அதன் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த விலையேற்றம் குறித்து அமுல் நிறுவனம், 2 ரூபாய் அதிகரிப்பு 4% மட்டுமே, இது சராசரி உணவு பணவீக்கத்தை விட மிகக் குறைவு என்று தெரிவித்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், அமுல் தனது புதிய பால் வகையின் விலையை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எரிசக்தி, பேக்கேஜிங், போக்குவரத்து மற்றும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரிப்பு, பால் உற்பத்தி செலவு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது, ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவு அதிகரிக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

அமுல் நிறுவனத்தின் அறிவிப்பால் பணவீக்கத்தால் சாமானியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய விலையின்படி, அகமதாபாத் மற்றும் சௌராஷ்டிரா சந்தைகளில் அமுல் கோல்டு பால் 500 மில்லிக்கு ரூ.30, அமுல் தாசா 500 மில்லிக்கு ரூ.24 மற்றும் அமுல் சக்தி 500 மில்லிக்கு ரூ.27 ஆக இருக்கும் என்று தகவல்.

Related Posts

Leave a Comment