மதியம் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவு…!

by Lifestyle Editor

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விளவங்கோடு மற்றும் திரிபுரா மாநிலம் ராம்நகர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 59.55%, நீலகிரியில் 53.02%, அரக்கோணத்தில் 51.98%, கடலூரில் 50.94%, மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேனியில் 51.43%, வேலூரில் 51.19%, தென் சென்னையில் 40.98%, வட சென்னையில் 39.67 வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 58.86% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment