ரூ. 42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், ஒரு சவரன் 42 ஆயிரத்தை நெருங்குவது பெரும் கவலையளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த மாதம் (டிசம்பர்) 2ம் தேதி ரூ. 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்துவந்த நிலையில், கடந்த 23ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,528க்கு விற்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ச்சியாக உயர்வைக் கண்டு வந்த தங்கமானது கடந்த 28ம் தேதி ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.312 வரை உயர்ந்தது.

புத்தாண்டு நேரத்தில் இந்த விலையேற்றம் நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 29ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.40,760க்கும் விற்கப்பட்டது. 30ம் தேதி 160 ரூபாயும், 31ம் தேதி 120 ரூபாயும் அதிகரித்தது. அதேபோல் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,528க்கும் விற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சவரன் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து தங்கம் விலை ரூ. 42 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, சவரன் 41,664க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 5,208க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 75 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடர் விலையேற்றம் இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில் தங்கம் விலை உயர்ந்து வருவது சற்று கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment