நம்பிக்கை, மகிழ்ச்சி, வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும் – பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து..

by Lifestyle Editor

2023ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு புத்தாண்டு பிறப்பின்போது மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “2023-ம் ஆண்டு சிறப்பானதாக அமையட்டும்! இந்தாண்டு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவரும் அற்புதமான ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment