கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்பு ….

by Lifestyle Editor

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் இன்று பதவியேற்கவுள்ளனர்.

குறித்த பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ளுர் நேரப்படி மதியம்12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு பெரிதும் சர்ச்சை நிலவி வந்த நிலையில் குறித்த இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Related Posts

Leave a Comment