இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் – நியூசிலாந்து அணி அறிவிப்பு .

by Lifestyle Editor

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 2க்கு1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி வருகிற 22ம் தேதி டாக்காவில் தொடங்குகிறது. இந்த தொடரை அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அந்த அணி, இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவர் 18 ந் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டாம் லதாம் ஏற்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி:

டாம் லதாம் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், பின் ஆலென், டெவான் கான்வே, மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், ஹென்றி சிப்லே, மைக்கெல் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி உள்ளிட்டோர் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Related Posts

Leave a Comment