உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி !

by Lifestyle Editor

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டல மாண்டஸ் புயலாக வலுவடைந்து கரையை கடந்தது.

இந்நிலையில் தற்போது கேரளா – கர்நாடகா கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்

டிசம்பர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை தொடர் மழைப்பொழிவு இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment