பொடுகு தொல்லையா ? மருத்துவம் …

by Lifestyle Editor

முடி வறட்சி, ஈரப்பதமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் என்று பல வித காரணங்களால் பொடுகு ஏற்படும். எல்லா வயதினருமே அவ்வப்போது பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு, தானாகவே சரியானாலும், சிலருக்கு தீவிரமான பிரச்சனையாக மாறிவிடுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் பொடுகுக்கு அற்புதமான மருந்துகளும் முழு நிவாரணமும் உள்ளது.

ஆயுர்வேத மருத்துவ முறைப்படி பொடுகு ஏற்படுவதற்கான காரணம், ஒவ்வொரு நபருக்கும் உடல் நல பாதிப்புகள் ஏற்படக் காரணமாக, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்கள் குறிப்பிடப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்று சமநிலை தவறினாலும், உடலில் பிரச்சனை ஏற்படுகிறது. பொடுகுத் தொல்லை என்பது அதிக வாதம் (dryness) உண்டாவதால் ஏற்படும் நிலையாகும். பொடுகு தொல்லை முழுவதுமாக நீங்க, இந்த மூன்றுமே சமநிலையில் இருக்க வேண்டும். இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் பல மூலிகை மருந்துகள் உள்ளன.

சர்வரோகினி வேப்ப இலைகள் :

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் மூலிகை மருந்துகளில் ஒன்று தான் வேம்பு! வேம்பின் கசப்புத் தன்மை ரத்தம் சுத்திகரிப்பு முதல் உடலுக்கு குளிர்ச்சி தருவது வரை பல விதங்களில் பயன் அளிக்கிறது. வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப இலைகளை அரைத்து தலையில் தடவி குளித்து வர, பொடுகுத் தொல்லை நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சையை தலையில் தேய்க்கலாமா என்று கேள்வி எழலாம்! எலுமிச்சையில் அதிகப்படியான வைட்டமின் சி மட்டுமல்லாமல், முடி ஆரோக்கியத்துக்கு தேவையான ஜின்க்கும் உள்ளது. நேரடியாக எலுமிச்சை சாறை முடியில் தடவாமல், ஆலிவ் எண்ணெய்யில் சேர்த்து தலைக்கு தடவி குளித்து வரலாம்.

குளிர்ச்சி தரும் கற்றாழை :

மண்டைப்பகுதியின் வெப்பம் குறைய, வறட்சி நீங்க, தலையில் ஈரப்பதம் அதிகரிக்க, எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்க, கற்றாழை மிகச்சிறந்த மருந்து. இந்த ஜெல்லை எடுத்து அப்படியே மண்டையில் தேய்க்கலாம். சில மணி நேரங்கள் அல்லது முதல் நாளிரவு அப்ளை செய்து, மறுநாள் தலைக்கு குளிக்கலாம்.

நெல்லிக்கனி :

நெல்லிக்காயில் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளது, இளமையை தக்க வைக்கும் ஒரு பொருட்களில் இதுவும் ஒன்று. பொடுகுத் தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக உதவுகிறது. துளசி இலைகளுடன், நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காயை சேர்த்துத் கெட்டியான கலவையாக அரைத்துக் கொள்ளவும். அதை மண்டை முழுவதும் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும்.

பிர்ங்கராஜ் எண்ணெய் :

முடி உதிர்வு, நரை, வறட்சி, அரிப்பு, எரிச்சல் என்று அனைத்து விதமான முடி பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வு பிரிங்கராஜ் எண்ணெய். தீவிரமான பொடுகால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வறண்ட மண்டைப்பகுதியை இந்த எண்ணெய் நிவாரணமாக இருக்கிறது. லேசாக சூடு செய்து, மண்டை முழுவதும் மயிர்க்கால்களில் நன்றாக தடவி, கொஞ்சம் மசாஜ் செய்து பயன்படுத்தினால் பொடுகில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

வெந்தயம் :

வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளிப்பது என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் பழக்கம். வெந்தயம் அதிக குளிர்ச்சி தரும் ஒரு பொருள். இதை தலைக்கு பயன்படுத்தும் போது, முடியின் வேர் வலுப்படுவதோடு, வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். பொடுகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வெந்தயத்தை முதல் நாளிரவு தயிர் அல்லது பாலில் ஊறவைத்து, மறுநாள் நைசாக அரைத்து தடவவும்.

டீ-ட்ரீ எண்ணெய் :

அத்தியாவசிய எண்ணெய்களில் பொடுகுக்கு உடனடி நிவாரணம் அழிப்பது டீ-ட்ரீ எண்ணெய். நேரடியாக இதை அப்படி பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் எண்ணெய்யுடன் கலந்து தலையில் அப்ளை செய்யலாம்.

பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் :

பேக்கிங் சோடா தலைப்பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொடுகு மற்றும் அரிப்பைக் குறைக்கிறது. நேரடியாக ஈரமான முடியில் பேக்கிங் சோடாவை அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்யலாம். ஆப்பிள் சைடர் வினிகரும் இறந்த செல்களை நீக்கி, பொடுகைக் குறைக்கும். இதனை சம அளவு தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

Related Posts

Leave a Comment