திருமந்திரம் – பாடல் 1581 : ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

குருவே சிவமென்னக் கூறின னந்தி
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவமாகக் கோனுமாய் நிற்குங்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.

விளக்கம்:

தமக்கு குருவாக அமைந்தவரே சிவப் பரம்பொருள் என்று கூறியருளினார் குருநாதராகிய இறைவன். ஆயினும் குருவாக இருப்பது சிவப் பரம்பொருளே என்பதை தமக்குள் சிந்தித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறு ஆராய்ந்து அறிந்து கொண்டால் தமது குருவே அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருளாகவும், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் நிற்கின்றதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு தமது குரு என்பவர் சொற்களால் விவரிக்க முடியாதவராகவும் ஐம் புல உணர்வினால் முழுமையாக உணர முடியாதவராகவும் இருக்கின்ற ஒரு இறைவனாக இருப்பார்.

Related Posts

Leave a Comment