எப்போதுதான் பிரசவம் நடக்கும்? அதற்கான அறிகுறிகள்

by Lifestyle Editor

கவலையேபடாதீர்கள் உங்களுக்கு தெரியாமல் பிரசவமானது நடக்கவே முடியாது. பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிபடுத்தும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை கீழ்காணும் அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை பின் வருமாறு

அடிவயிறு லேசாகும் : குழந்தையானது அடிவயிற்றில் மிகவும் இறங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் குழந்தையானது பிறப்புறுப்பு பாதையில் பிரசவம் நடப்பதற்கு ஏதுவாக சரியாக பொருந்தியதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது சில மணி நேரத்திற்கு முன்போ நடக்கும்.

ரத்தக்கசிவு ஏற்படும் : பிறப்புறுப்பு வழியே ரத்தகசிவு ஏற்படும், இந்த ரத்தமானது தெளிவான பிங்க் நிறத்தில் இருக்கும். கருப்பையின் வாயில் சேர்ந்திருந்த திரவகட்டியானது பிறப்புறுப்பின் வழியே வெளியே தள்ளுவதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது பிரசவம் தொடங்க உள்ள சில மணி நேரம் முன்போ ஏற்படும்.

பிறப்புறுப்பு சவ்வு கீறப்படும் : பிறப்புறுப்பிலிருந்து நீர் வெளியேறுதல். இந்த நீரானது குழந்தையை சுற்றியுள்ள பனிக்குடம் உடைவதால் வெளியாகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு பல மணி நேரங்கள் முன்பு தொடங்கி பிரசவத்தின் போதும் நிகழும்.

Related Posts

Leave a Comment