வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் அந்த நடிகை… செம்ம ட்விஸ்ட்

by Column Editor

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்துள்ளார். கவினுடன் காதல், சாக்‌ஷியுடன் சண்டை என பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் நடிகையும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான லாஸ்லியா மரியநேசன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது பிக்பாஸ்.விஜய் டிவி-யில் இதுவரை பிக்பாஸின் 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி உள்ளது. ஆண்டுக்கு 100 நாட்களுக்கு மட்டுமே ரசிகர்களை பிக்பாஸ் ஜூரத்தில் வைத்து வந்த தயாரிப்பு நிர்வாகம், 100 நாட்களையும் கடந்து மேலும் சில நாட்களுக்கு ரசிகர்களை பிக்பாஸ் ஜூரத்திலேயே வைத்திருக்க முடிவு செய்தது.அதனால் ரசிகர்களை குஷிப்படுத்த OTT-யில் பிக்பாஸை அறிமுகப்படுத்த போவதாக பிக்பாஸ் சீசன் 5 நடந்து கொண்டிருக்கும் போதே அறிவிப்பு வெளியானது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT-யில் பிக்பாஸ் அல்ட்டிமேட் என்ற பெயரில் புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 30-ஆம் தேதி பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோ டெலிகாஸ்ட் ஆக துவங்கி இருக்கிறது. முதல் 4 வாரங்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்பு நேரமின்மை காரணமாக நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கூறினார் . கடந்த வாரத்தில் இருந்து நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் லைவ் ஸ்ட்ரீமிங் என்ற அடிப்படையில் பிக்பாஸ் OTT வெர்ஷன் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்டார் விஜய் டிவி-யில் ஏற்கனவே ஒளிபரப்பான அனைத்து க்ஷ் பிக்பாஸ் bigg boss tamil போட்டியாளர்களில் சிலர் இந்த Bigg Boss Ultimate ஷோவில் பங்கேற்று உள்ளனர். 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை, சுரேஷ் தாத்தா, சுஜா, ஷாரிக், அபிநய், வனிதா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். போன வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக விஜய் டிவி சதீஷ், மறுபடியும் சுரேஷ் தாத்தா ஆகியோர் உள்ளே சென்றனர்.

இந்த வாரம் முழுவதும் இவர்கள் இருவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் சினேகன் மற்றும் ஸ்ருதி டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக லாஸ்லியா செல்ல இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.லாஸ்லியா ஏற்கெனவே பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்துள்ளார். கவினுடன் காதல், சாக்‌ஷியுடன் சண்டை என பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரின் நடிப்பில் சில படங்களும் ரிலீஸூக்கு வெயிட்டிங். இணையத்தில் லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோவர்ஸூம் இருக்கின்றனர்.

இப்படி இருக்கையில், லாஸ்லியாவின் வைல்டு கார்டு என்ட்ரி நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாஸ்லியா பெஸ்டியான அபிராமி இப்போது ஜூலியுடன் நெருக்கமாக இருக்கிறார். லாஸ்லியாவின் என்ட்ரிக்கு பிறகு தான் ஆட்டம் களைக்கட்ட போகுது என்கின்றனர் ரசிகர்கள்.

Related Posts

Leave a Comment