அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை!

by Lifestyle Editor

தென் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மார்ச் 2, 3ம் தேதி தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகிற ஒன்றாம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இரண்டாம் தேதி தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி ,மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென்காசி ,மதுரை ,விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்க கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 1-ஆம் தேதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment