வெந்தயம் பயன்படுத்தி இத்தனை சரும பிரச்சனைகளை சரி செய்யலாமா…?

by Column Editor

இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் நீங்கி சருமக் குழிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளும் நீங்கும்.

சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயம். அது உணவுக்கு சுவைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

சரும அழுக்குகளை நீக்கும் :

இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் நீங்கி சருமக் குழிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளும் நீங்கும்.

சரும நிறத்தை தெளிவாக்கும் :

இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை சேமித்து வைத்து அதை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவினால் நொடியில் முகம் பளபளக்கும். ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி தினமும் முகத்தில் ஸ்பிரே அடிக்கலாம்.

பொடுகுத் தொல்லையைப் போக்கும் :

வெந்தயம் நச்சு நீக்கி மட்டுமல்ல பூஞ்சைகளை அழிக்கும் வல்லமையும் கொண்டது. ஊறவைத்த வெந்தயத்தை அறைத்து அதோடு தயிர் சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

வெள்ளை முடி வளர்ச்சியைத் தடுக்கும் :

20 வயதிலேயே முளைக்கும் வெள்ளை முடி வளர்ச்சியைத் தடுக்க வெந்தயத்திலுள்ள பொட்டாசியம் தடுக்க உதவும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதோடு பெரிய நெல்லிக்காய் சாறை சேர்த்து தலைமுடி வேர்களில் தடவி தலைக்குக் குளியுங்கள். வெள்ளை முடியைத் தவிர்க்கலாம்.

பளிச் முகம் :

வெந்தயத்தில் வைட்டமின் c இருப்பதால் அது முகத்தை பளிச்சென மாற்றும். ஊற வைத்து அரைத்த வெந்தயத்தில் பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளபளக்கும்.

முகச் சுருக்கங்களை நீக்கும் :

வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து முகத்தில் தேய்ப்பதால் முகச் சருமம் இறுகி சுருக்கங்கள் நீங்கும். இழந்த இளமையை மீட்க உதவும்.

முகப்பருக்கள் நீங்கும் :

இது நச்சுக் கிருமிகளை நீக்க உதவும். வெந்தயத்தை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஆறியதும் வெந்தயத்தை நீக்கிவிட்டு தண்ணீரை தினமும் பருக்கள் உள்ள இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment