ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வே வேலை… தகுதி என்ன? – முழு விவரம் உள்ளே!

by Column Editor

கொரோனா பரவலுக்கு முன்பே நாட்டில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகரித்த வண்ணமே இருந்தது. அதற்குப் பின்பு உச்சத்திற்குச் சென்றது. பெரும்பாலானோர் வேலையிழந்தனர். தனியார் துறையை நம்பியிருந்ததால் தான் இப்படி நடந்தது என எண்ணிய அவர்களின் கவனம் அரசு துறைகளை நோக்கி குவிந்திருக்கிறது. இப்போது அனேக பேர் அரசு வேலையைப் பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்களுக்கான ஓர் அறிவிப்பை தென் கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு விளையாட்டு திறமை இருக்க வேண்டும்.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் 2, 3, 4 மற்றும் 5 நிலைகளுக்கு மொத்தம் 21 விளையாட்டு ஒதுக்கீட்டு இடங்களுக்கு (Sports Quota) ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. நிலை 4 மற்றும் 5 பதவிகளுக்கு, விளையாட்டு சாதனைகளுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். லெவல் 2/3 காலியிடங்களுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்குத் தகுதிபெற 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பதவிகளுக்கு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ சான்றிதழ் கட்டாயம் தேவை.

விளையாட்டு திறன், உடல் தகுதி, பயிற்சியாளரின் கண்காணிப்பு, சாதனைகள், கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் படி சம்பளம் வழங்கப்படும். தேர்வுக் குழுவால் இறுதி செய்யப்படும் விளையாட்டு சோதனைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பில் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Related Posts

Leave a Comment