கண் நோய்கள் வராமல் தடுக்க மருத்துவர் அளிக்கும் அவசியமான குறிப்புகள்!

by Column Editor

பார்வை குறைபாட்டுக்கான காரணங்கள் என்னென்ன, அதை தீவிரமாகாமல் கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். எல்லா வயதினருக்கும் இந்த குறிப்புகள் உதவும்.

பார்வைக்குறைபாட்டுக்கு காரணங்கள் பலவும் உண்டு. உடலில் மிக முக்கியமான உறுப்பான கண்களின் பார்வைத்திறன் சீராக வைத்திருக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் G.K.தாராஜெயஸ்ரீ BAMS. கண் பார்வையை பாதுகாக்க செய்ய வேண்டிய எளிமையான குறிப்புகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பல்வேறு குறைபாடு காரணமாக பார்வை பாதிப்பு உண்டாகிறது. இது கிளைகோமா மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு ஆகியவற்றால் அதிகரிக்கலாம்.

கிளைகோமா:

இது கண்களில் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் உண்டாகிறது. இது பார்வையை அளிக்கும் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும். இவர்கள் எந்த பொருளை பார்த்தாலும் அந்த பொருளை சுற்றி ஒரு ஒளிவட்டம் தனியாக தெரிவது போல் இருக்கும்.

மாகுலர் சிதைவு:

புறப்பார்வை காரணமாக தோன்றலாம். பொதுவாக பார்வை கூர்மை மங்கலாகிறது. இந்த மாகுலர் தான் படிக்கவும், கூர்மையான தையல் போன்ற பணிகளிலும் வாகனம் டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் மையப்பகுதி ஆகும்.

கண்புரை:

கண்புரை என்பது வயதானவர்களுக்கு மிகவும் பொதுவான நோயாகும். இந்த நிலையில் பார்வையின் மொத்த மங்கலானது முழு கண்ணின் லென்ஸும் பாதிக்கப்பட்டுள்ளதால் உண்டாகிறது.

நீரிழிவு ரெட்டினோபதி:

நீரிழிவு கண்களின் பின்புறத்தில் உள்ள சிறிய தமனிகள் மற்றும் இரத்த நாளங்களுக்கு சேதத்தை உண்டாக்குகிறது.

இவை தவிர கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளும் பொதுவானது.

கண் பார்வையை மேம்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்:

தூங்கி எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவதுண்டு. அப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவி எடுக்கவும்.

வாயில் தண்ணீரை முழுவதும் நிரப்பி குளிர்ந்த நீரை கண்களில் படும்படி சுத்தம் செய்யுங்கள். இது வாயில் நீர் செலுத்தும் அழுத்தத்தின் காரணமாக கண்களின் தசைகளை தூண்டும். மேலும் தெளிப்பதால் முகத்தில் குளிர்ந்த நீர் நரம்பு முனைகளை உயிர்ப்பித்து, சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

கண்களை கழுவுங்கள் ஆயுர்வேத பயிற்சியாளர்கள் கண்களுக்கு திரிதோஷிக் பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள். அதை தயாரிக்க திரிபலாவை இரவில் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் இந்த திரவத்தை வடிகட்டி கண்களை இரண்டு முறை கழுவி விடவும். இது கண்களில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி அமைதிப்படுத்த செய்யும். கண் கோளாறுகளை தடுக்கவும் செய்யும்.

கண்களுக்கு மசாஜ்:

கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் உண்டு.

உங்கள் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உங்கள் புருவங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கட்டைவிரல் புருவங்களுக்கு மேல் இருக்கும் ஆள்காட்டி விரல் புருவங்களுக்கு கீழ் இருக்கும்.

புருவங்களை இலேசாக அழுத்தி நேராக்கவும். அனைத்து புள்ளிகளிலும் இலேசான அழுத்தத்தை காட்டவும்.

கட்டை விரலால் கண் இமையை சுற்றி கண்களோடு சேர்த்து மென்மையாக மசாஜ் செய்யவும்.

கண்களை சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு இந்த பயிற்சி செய்யுங்கள். இது கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் பார்வையை பதித்திருப்பவர்களுக்கு சோர்வில் இருந்து மீட்டெடுக்கும்.

பார்வையை மேம்படுத்த பயிற்சி:

கண் இமையை சுற்றியுள்ள தசைகளை துண்டுவதற்காக இந்த பயிற்சி செய்யப்படுகிறது. கண்கள் முதலில் வலதுபுறமாகவும் , பிறகு இடதுபுறமாகவும் பிறகு மேலும் கீழும் சுழற்ற வேண்டும். இந்த எதிர் கடிகார திசையில் மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.

உள்ளங்கையால் கைகளை 30 நிமிடங்கள் சூடு செய்து கண்களின் மீது வைக்கலாம். கண் சிமிட்டுவதால் கண்களின் ஈரப்பதம் பெறுவதற்கான இயற்கையான வழிமுறையாகும்.

கண்கள் ஓய்வெடுக்க உதவ, ஒவ்வொரு ஐந்து முதல் ஆறு விநாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுங்கள். இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் கண் சிமிட்டுவதால் கண்களுக்குள் ஈரப்பதம் கிடைக்கும்.

சரியாக தூங்குங்கள்:

ஆரோக்கியமான கண்களுக்கு நீங்கள் செய்யும் கண்களுக்கான உடற்பயிற்சி, கூடுதலாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான செயல்முறையில் உங்கள் உணவும் அவசியம்.

உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள்:

பாதாம், திராட்சை மற்றும் அத்திப்பழங்கள் கண்களுக்கு அமுதமானது. கண் பார்வையை மேம்படுத்த எப்படி எடுக்கலாம். ஆறு முதல் பத்து பாதாம், பதினைந்து திராட்சை இரண்டு அத்திப்பழங்களை சிறிது தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடவும். இந்த பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் செரிமான செயல்முறை சீராக்கி உடல் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இதனால் கண் பிரச்சனைகள் தீர்கிறது.

கேரட் மற்றும் நெல்லிக்காய்:

கண் கோளாறுகளுக்கு மற்றொமொரு நல்ல வீட்டு வைத்தியம் இது . ஒரு டம்ளர் கேரட் சாறு மற்றும் நெல்லிக்காய் சாறு என்று மாற்றி சீரான இடைவெளியில் எடுக்க வேண்டும். கேரட் மற்றும் நெல்லியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன.

தேன் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

தினசரி செம்பு பாத்திரத்தில் ஊறவைத்த நீரை ஒரு லிட்டர் அளவில் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இது கண்களுக்கு மட்டும் அல்ல பிற முக்கிய உறுப்புகளுக்கும் உதவுகிறது.

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் தினசரி உணவில் சேர்க்கவேண்டும். கேரட், பச்சை இலை காய்கறிகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, அத்திப்பழம் மற்றும் பாதாம் போன்றவை சேர்க்கலாம்.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது.

Related Posts

Leave a Comment