தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!

by Column Editor

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 22ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி ,தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.23ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.

Related Posts

Leave a Comment