மிகவும் ஸ்பெஷல் இடத்தில் வலிமை படத்தை பார்க்கவுள்ள ஜான்வி கபூர்! இன்ஸ்டாவில் அவர் பதிவிட்ட புகைப்படம்…

by Column Editor

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.

வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

வலிமை படத்தின் முன்பதிவு உலகளவில் ஆங்காங்கே தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் ஓரிரு தினங்களில் வலிமை படத்திற்கான முன்பதிவு தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் இளம் நடிகையும் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் அவரின் வலிமை திரைப்படத்தை ஸ்பெஷலாக பார்க்கவுள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதன்படி பிரான்ஸில் உள்ள Le Grand Rex திரையரங்கில் பார்க்கவுள்ளாராம், அந்த திரையரங்கு தான் உலகில் உள்ள மிக பெரிய திரையரங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment