12 மணிநேரமாக உயர்கிறதா அரசு ஊழியர்களின் வேலை நேரம்?? – மத்திய அரசு சொன்ன விளக்கம்…

by Column Editor

அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி நேரமாக ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றியது. அந்த சட்டங்களில் இடம்பெற்ற முக்கிய அம்சம், நாள் ஒன்றுக்கு 8 மணி நேரமாக உள்ள பணி நேரத்ந்தை , 12 மணி நேரமாக உயர்த்தப்படும் என்பதுதான். இந்தியாவில் தற்போது வாரத்தில் 6 நாட்களுக்கு 8 மணி நேரம் வேலை என்கிற முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறைப்படி ஊழியர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த 4 சட்டங்களைக் கொண்ட புதிய விதிகளில் தினமும் 12 மணி நேரம் வேலை நேராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக இருக்கும். மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை ( வீக் ஆஃப்) எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த முறைப்படியும் ஊழியர்கள் பணி நேரம் 48 மணி நேரமாகவே இருக்கும்.

4 சட்டங்களை உள்ளடக்கிய இந்த புதிய விதிமுறைகள் ஒருமித்த ஆதரவு கிடைக்காததால் இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. ஆனால் இந்த புதிய ஊதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரம், சம்பளம் உள்ளிட்டவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதேநேரம் இந்த புதிய ஊதிய விதிகள் அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் ஒருபுறம் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறதா என நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment