ராகி லட்டு : எளிமையான செய்முறை இதோ…

by Column Editor

கேழ்வரகு இரும்புச் சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள், வளரும் குழந்தைகளும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1.5 கப்

ஏலக்காய் – 5

வெல்லம் – 1 கப்

தேங்காய் – 1 கப்

முந்திரி , பாதாம், காய்ந்த திராட்சை – கையளவு

நெய் – 2 tbsp

செய்முறை :

தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து நெய் ( நெய் இல்லையெனில் நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம் ) விட்டு காய்ந்ததும் கேழ்வரகு மாவை கொட்டி கிளறுங்கள். நெய்யுடன் மாவு கலந்து உதிரியாக வரும் வரை கிளறவும்.

பின் அரைத்த தேங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். அதையும் நன்றாகக் கிளறுங்கள். மாவு உதிரியானபின் அடுப்பை அணைத்து தனியாக வைத்துவிடுங்கள்.

அடுத்ததாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை காய்ச்சி பாகு எடுத்துக்கொள்ளுங்கள். பாகு கைகளில் ஒட்ட வேண்டும்.

பாகு காய்ச்சியதும் எடுத்து வைத்துள்ள கேழ்வரகு மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள். கட்டிக்கொள்ளாமல் கிளற வேண்டும்.

அதோடு காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கிளறியதும் கைகளில் நெய் தடவிக்கொண்டு விருப்பம்போல் சிறியதாகவோ , பெரியதாகவோ உருண்டைகளாக பிடித்து வையுங்கள்.

அவ்வளவுதான் கேழ்வரகு லட்டு தயார்.

Related Posts

Leave a Comment