பிப்ரவரியில் 25 கோயில்களில் கும்பாபிஷேகம் – இந்து சமய அறநிலையத்துறை…

by Column Editor

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் இம்மாதம் (பிப்ரவரி) குடமுழுக்கு நன்நீராட்டு விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “

06.02.2022 – திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அருள்மிகு சீனிவாச வரதராஜப் பெருமாள் திருக்கோயில்,

06.02.2022 – திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோயில்,

06.02.2022 – மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருள்மிகு செல்லப்பர் வகையறா திருக்கோயில்,

06.02.2022 – ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில்,

06.02.2022 – சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருள்மிகு வளரொளீஸ்வரர் திருக்கோயில்,

06.02.2022 – தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றாங்கரை அருள்மிகு ஆனந்த வல்லியம்மன் திருக்கோயில்,

06.02.2022 – ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில்,

06.02.2022 – திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

06.02.2022 – பாபநாசம் அருள்மிகு தாமோதர வினாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்,

06.02.2022 – கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் முத்தாரம்மன் திருக்கோயில்,

06.02.2022 – சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்

11.02.2022 – புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில்,

11.02.2022 – தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலந்தூர் அருள்மிகு வீரனார் மற்றும் அய்யனார் திருக்கோயில்,

07.02.2022 – திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் தட்டாரப்பட்டு அருள்மிகு தேவி குங்குமக்காளியம்மன் திருக்கோயில் ,

11.02.2022 – கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டம் பெரியகண்டியாங்குப்பம் அருள்மிகு வெண்மலையப்பர் திருக்கோயில்,

11.02.2022 – பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் ,

20.02. 2022 – தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பாளுர் அருள்மிகு கல்யான சுந்தரியம்மன் திருக்கோயில்

உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் திருக்குடமுழுக்கு நன்நீராட்டு விழா இம்மாதம் (பிப்ரவரி) சிறப்பாக நடைபெற இருக்கின்றது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment